Posts

Showing posts from May, 2025

கடவுளுடன் மது அருந்துதல்

Image
 நான் ரசித்த கவிதைகளில் ஒன்று  யூமா வாசுகியின்  படைப்புகளில்   ஒன்றான  கடவுளுடன் மது அருந்துதல்.  மிகுந்த தாக்கத்தையும் மது தரும் மகிழ்போதையும் காதல் மடந்தையால் நுகர்ந்துணரும் கிளர்ச்சியூட்டமும் எனக்களித்த கவிதை இதோ:-                   கடவுளுடன் மது அருந்துதல் தன்னந்தனியாக மது விடுதிக்கு வந்தேன் - அங்கே எனக்கு முன்பாக கடவுள் வந்து காத்திருந்தான் உறையிலிருந்து வாளை தீரம்மிக்க  அலட்சியத்துடன் உருவுவதாக  திரவத்திலிருந்து வெளிப்பட்டு விட்டது தூய கிறக்கம் பருக பருக பாதை சம்பவித்த நீர்வழி நெடும்பயணத்தில்  திறனால் களித்த என் நரம்புகள்  மலைச்சர்ப்பங்களாக திமிறி நெளிந்தன  தான் பெற்ற பிள்ளை எம்முள் கிளர்ந்தேறி விளையாடுவதை பெருமையோடு பார்த்தபடி புட்டியில் மிச்சம் இருக்கும் மதுவோடு பேசுவதற்கு  நல்ல பெயர் சூட்டிக் கொள்ள யோசித்தோம் நானும் கடவுளும். போதையின் ஒரு முத்தம் குவிந்த மையத்திலிருந்து விழித்துப் பரவுகிறது காண்பதன் மீதெல்லாம் பூக்கள் தூவும் பார்வை. கடவுளின் மகிழ்வை கவனித்தவாறே பாதி அளவ...